Thursday, November 17, 2011

Free Online Education Portal.

2011 - இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல் - Free Online Education Portal.
14 நவம்பர் 2011, 07:02 க்குஇல் Ravi Nagஆல் எழுதப்பட்டது
நான் இதுவரை பெர்ஸ்னலாக எந்த ஒரு உதவியும் கேட்டதில்லை. ஆனால் இந்த நோட்ஸை நீங்கள் முடிந்த வரை பகிர்வது தான் நான் இப்பொழுது கேட்க்கும் ஒரு மாபெரும் உதவி.

ஆம் இந்த சிறுவர் தினத்தில் "இலவச ஆன்லைன் கல்வி"க்காக நான் ஆறு மாத உழைப்பில் இந்த பணியை செய்துள்ளேன். இது தான் ஆரம்பம். ஆம் ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதக இருக்கும். இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றூம் ஆசிரியர் பயிற்ச்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ண்மும் அதன் பயன்பாடும்......

1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியை தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியை சுமக்க தேவையில்லை.

2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்க்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.

3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்ல்து தெட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.

4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்த பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியர்க்கோ அல்ல்து பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்த பக்கங்கள் கிடைக்கும்.

5, பரிட்ச்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ண தெவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்க்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்ச்சி செய்யலாம்.

6. மாதிரி வினாத்தாள் மற்றூம் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றூம் கடந்த உரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்ச்சி செய்யலாம்.

7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்த புத்தகத்தை அல்ல்து தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்தலாம்.

8. பள்ளீ மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜக்டர்" மூலம் இனைத்தால் இந்த ஈ புத்தகத்தை பெரிய திரையில் காண்பித்து எல்லொரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகபடுத்தபடுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்த பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஸல் நோட்ஸ் உங்கள் கன்னுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து. அத்னால் அதுவே உங்களுக்கு படிக்கும்.

மிக சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளோம். மற்றூம் உலகில் உள்ள அனைத்து கல்வியாளர்களின் டிப்ஸ் வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து வசதியும் படி படியாக செயல்படுத்துவேன்.

இது ஒரு இலவச கல்வி சேவை. இதற்க்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்) நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக ப்டிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட் செய்யபட்டுள்ளது.

தயவு செய்து என் நெடுநாள் கணவான இந்த இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டலை கொண்டு செல்ல உதவுங்கள்.

www.samacheeronline.com / www.samacheerkalvi.info / www,samacheerkalvionline.in

நன்றியுடன் - நாகாராஜன் ரவி - 14 நவம்பர் 2011. - nag@insightgroupglobal.com

Insight Free Online Education.
Rs 999/- Insight Tablet Launching soon.

No comments:

Post a Comment